follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2'அரசியலில் இருந்து விடைபெறுகிறேன்..'

‘அரசியலில் இருந்து விடைபெறுகிறேன்..’

Published on

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பல இடையூறுகளுக்கு மத்தியில் அரசியலில் பிரவேசித்த தமது நோக்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை இயன்றவரை உயர்த்துவதே எனவும் அதற்காக இயன்றளவு சேவைகளை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களைக் கேடயமாகப் பாவித்து அரசியலில் ஈடுபட தமக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலிலேயே அரசியலில் இருந்து விலக நினைத்தேன் என்றும், தான் தொடங்கிய திட்டங்களால் அந்தத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போது வயோதிகமாக உள்ளதால், உடல் பலவீனமாக இருப்பதாக கருதுவதால், எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(23) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...

ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி – NPP உறுப்பினர் கைது

இம்முறை பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9...