follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஅங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு 17 மில்லியன் ரூபா செலவில் மின்சார மோட்டார் சைக்கிள்

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு 17 மில்லியன் ரூபா செலவில் மின்சார மோட்டார் சைக்கிள்

Published on

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கத்தினால் முடிந்த அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (09) நடைபெற்ற ‘போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும்” நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அதன்படி அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 17 மில்லியன் ரூபா செலவில் 50 மின்சார மோட்டார் சைக்கிள்கள் இதன்போது வழங்கப்பட்டன.

இவ்வாறு இராணுவ வீரர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கி ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் தொழில் முயற்சியை மேம்படுத்த முடியுமென இராணுவச் சேவை அதிகாரசபை நம்பிக்கை தெரிவிக்கிறது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் ஒருமைப்பாட்டையும், சுயாதீனத் தனைமையையும் பாதுகாக்க உயிரைப் பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார்.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான மேலும் 76 மின்சார மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்குவதாக உறுதியளித்த ஜனாதிபதி, மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இராணுவ வீரர்களின் நலனுக்காக உயர்வான அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வின் நிறைவில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

LATEST NEWS

MORE ARTICLES

கனமழை : மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி...

போலிச் செய்தி தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...