follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுE-Passport வழங்குவதை விரைவுபடுத்துமாறு பணிப்புரை

E-Passport வழங்குவதை விரைவுபடுத்துமாறு பணிப்புரை

Published on

இலத்திரனியல் கடவுச்சீட்டு (E-Passport) வழங்குவதில் 4 ஆண்டுகளாகத் தாமதம் ஏற்பட்டுவது குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

2020ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கொள்முதல் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, அந்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குழு பணிப்புரை வழங்கியது.

விமான நிலையக் கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு இரவு நேரங்களில் போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகள் இல்லாதது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, நெரிசலான நேரங்களில் வினைத்திறனான வகையில் அதிகமான அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறும், அதனை ஏப்ரல் 15ம் திகதிக்கு முன்னர் குழுவில் சமர்பிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...