follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுசீன நிதியுதவியில் 1996 வீடுகள் இரண்டு வருடங்களில் மக்களிடம்

சீன நிதியுதவியில் 1996 வீடுகள் இரண்டு வருடங்களில் மக்களிடம்

Published on

கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி.மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு முகத்துவாரத்தில் நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இதன்போது 2010 ஆம் ஆண்டில் கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகள் அடங்கிய இந்த வீட்டுத்தொகுதியை ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளித்தார்.

பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாம் அமுல்படுத்திய வரிக் கொள்கை வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகப்படுத்தியது. ஆனால் அந்த கஷ்டங்களை நீங்கள் தாங்கிக் கொண்டதாலேயே, கடன் வாங்காமலும், பணம் அச்சடிக்காமலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது. அதனால் தான் இந்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது. ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்றிக் கூறும் வகையிலேயே நிரந்தர காணி உரிமை, நிரந்தர வீட்டுரிமையை வழங்குவதாக கருதுகிறேன். எதிர்காலத்தில் 50,000 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும். நான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1996 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளையும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.

காணி, வீட்டு உரிமைகளுக்கான நிரந்தர உரிமைகள் இதற்கு முன்னதாக வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் கல்வி,காணி, வீட்டு, வியாபார உரிமைகளை மக்களுக்கு வழங்கி பொருளாதாரத்தை மக்கள் பக்கம் விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கான பெரும் பங்களிப்பை அதனூடாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

கனமழை : மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி...

போலிச் செய்தி தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...