follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP2பொதுவெளியில் ரணிலை ஆதரிப்பதாக கருத்து கூற SLPP தடை..

பொதுவெளியில் ரணிலை ஆதரிப்பதாக கருத்து கூற SLPP தடை..

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் கட்சி உரிய தீர்மானம் எடுக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தடை விதித்துள்ளது.

இதற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது பல பிரிவுகளாக பிரிந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

அதிகமானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்திய அதேவேளை, கட்சியிலிருந்தே வேட்பாளரை நியமிக்க வேண்டும் என மற்றொரு குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் அரசியலமைப்பை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் மற்றும் அநுரவின் விவாதத்திற்கு பொது விடுமுறை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை...

டயானாவுக்கு தாய்நாடு ‘இலங்கையாம்’

இரட்டைக் குடியுரிமை தொடர்பாக டயானா கமகேவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய விசேட தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்ட டயானா...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...