follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP2ஈரான் தாக்குதலால் பதறிப்போன இஸ்ரேல், தலைமறைவான நெதன்யாகு?

ஈரான் தாக்குதலால் பதறிப்போன இஸ்ரேல், தலைமறைவான நெதன்யாகு?

Published on

இஸ்ரேல் ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழிவிற்கான விமானம் எனப்படும் டூம்ஸ்டே விமானத்தில் தப்பி சென்றதாக தகவல்கள் வருகின்றன.

அணு ஆயுதப் போர், பேரழிவு அல்லது முக்கிய இராணுவ மற்றும் அரசாங்க உள்கட்டமைப்பை அச்சுறுத்தும் பெரிய அளவிலான போரின் போது பெரிய தலைவர்கள், ஜனாதிபதிகள் தப்பிப்பதற்காக பயன்படுத்தும் விமானம்தான் டூம்ஸ்டே விமானம் என்பது ஆகும். அணு ஆயுதம் கொண்ட இந்த விமானம் ரேடாரில் பெரிய அளவில் சிக்காமல் செல்லும் திறன் கொண்டது. இதுவரை அத்தகைய விமானங்களை வடிவமைத்து தயாரித்த நாடுகள் அமெரிக்கா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு மட்டுமே.

இந்த விமானம் இஸ்ரேலிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானங்கள் பொதுவாக தீவிர தாக்குதல்களை தாக்கு பிடிக்கும். அதேபோல் விமானத்திலேயே சில நாட்கள் பாதுகாப்போடு இருக்கவும் உள்ளே வசதிகள் இருக்கும்.

இஸ்ரேல் ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழிவிற்கான விமானம் எனப்படும் டூம்ஸ்டே விமானத்தில் தப்பி சென்றதாக தகவல்கள் வருகின்றன. அவர் , ஜனாதிபதி மற்றும் மொத்த அமைச்சரவை இதில் தப்பி ரகசிய இடத்திற்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் போர் பெரிதாக போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில்; நேற்றிரவு ஈரான் இராணுவம் இஸ்ரேலின் பாதுகாப்பு படை தளத்தின் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தது. இதனை சமாளிக்க இஸ்ரேல் சுமார் 1.35 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 1ம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்த ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் நேற்று தாக்குதலை தொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

கனமழை : மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி...

போலிச் செய்தி தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...