ரைசியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு

1406

இம்மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உமா ஓயா திட்டத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவிற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டிற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு இந்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஈரான் ஜனாதிபதியின் நாட்டிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, ஈரானிய பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி வரும் விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கி பலத்த பாதுகாப்புடன் உமா ஓயா சென்று அன்றைய தினம் திரும்பிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் இந்த விஜயம் தொடர்பில் இஸ்ரேலின் மொசாட் புலனாய்வுப் பிரிவினரும் அமெரிக்க உளவுத் துறையினரும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here