சேவைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு

114

முறையான விடுமுறையின்றி சேவையில் இருந்து விலகியுள்ள இராணுவ வீரர்களுக்கு சட்ட ரீதியாக இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கு பொது மன்னிப்பு காலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2024 ஏப்ரல் 02, இற்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பின்வரும் ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் என்பதோடு அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கைகள் 72 மணித்தியலங்களுக்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here