follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2ரணிலிடம் இருந்து 32 கோடி பெற்ற ஐக்கிய மக்கள் எம்பிக்கள்

ரணிலிடம் இருந்து 32 கோடி பெற்ற ஐக்கிய மக்கள் எம்பிக்கள்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பணிப்புரையின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களுக்கு 3200 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அபிவிருத்தி பணிகளுக்காக பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டுக்கான பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு மேலதிகமாக, நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட 85 திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக விடுவிக்கப்பட்ட தொகை 05 கோடி ரூபாவாகும்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி சமர்ப்பித்த 89 திட்டங்களுக்கு ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்ட தொகை 08 கோடி ரூபாவாகும்.

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் 708 திட்டங்களுக்கு 10 கோடி ரூபாவை விடுவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் 85 திட்டங்களுக்காக விடுவிக்கப்பட்ட தொகை 05 கோடி ரூபா.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் கலாநிதி காவிந்த ஹேஷான் ஜயவர்தனவின் 34 திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகை 07 கோடி ரூபா.

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட சபை உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவின் 25 திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகை 05 கோடி ரூபா.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 29.12.2023 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் MF/02/2023 இன் விதிமுறைகளுக்கு இணங்க இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ராஜபக்ஷவின் ஆசி பெரும் எவருக்கும் ஆதரவு இல்லை

ராஜபக்ஷவின் ஆசியுடன் வரும் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க...

ஜனாதிபதியின் பிரசார மேடையில் SJB எம்பி..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவிப்பதற்காக அகில இலங்கை மக்கள் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு...

பொஹட்டுவவின் ஆதரவைப் பெற சாகல சுசில் மஹிந்தவுடன் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும்...