ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமையை தான் பெற்றுக் கொண்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (பொஹட்டுவ) உறுப்பினர் எனவும், அவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருந்தால் இரண்டு கட்சிகளில் எவ்வாறு அங்கத்துவம் பெற முடியும் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருந்தார்.
இரண்டு கட்சிகளின் உறுப்புரிமையை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை ஒராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.