ஈரான் ஜனாதிபதியின் வருகை தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை

427

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸின் இலங்கை விஜயத்தின் திகதி நேற்றைய தினம் வரை (21) அறிவிக்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஈரான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், இந்நிகழ்வில் ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் மகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமா ஓயா திட்டமானது 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய கட்டத்திற்கு சேர்க்கின்றதோடு, குறித்த திட்டத்திற்காக 529 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்க ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது நிலவும் மோதல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஈரான் ஜனாதிபதியின் இந்த நாட்டுக்கான விஜயம் நிச்சயமற்றது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்ட திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ஈரான் ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஈரான் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here