பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு மனித பாவனைக்கு தகுதியற்றவை என இன்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் வைக்கப்பட்டவையே தரமற்றது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 அரிசி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், சுவையாளருக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின்படி, அவை மனித நுகர்வுக்குத் தகுதியற்றவை என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும் உபுல் ரோஹன தெரிவித்தார்.
தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.