கெரவலபிட்டிய மின் இணைப்புக்கான தடைகள் நீக்கம்

91

2019 இல் ஆரம்பிக்கப்பட்ட இதுவரை நிறைவுசெய்யப்படாத கெரவலபிட்டிய – நுகபே 33,000 கிலோவோட் மின் இணைப்புக்கான தடைகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரின் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது முத்துராஜவெல ஈரநிலத்திற்கு மேல் அமைக்கப்பட்டுவரும் கெரவலபிட்டிய – நுகபே 33,000 கிலோவோட் மின் இணைப்புக்கு சுற்றாடல் அனுமதியை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போதிலும், அரச நிறுவனமொன்றின் ஆட்சேபனை காரணமாக இப்பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்ததுடன், அதற்கமைய, தடைகளை நீக்கி கெரவலப்பிட்டிய – நுகாபே 33,000 கிலோவொட் மின் இணைப்பை அமைப்பதற்குள்சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இப்பகுதியில் 8 தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் நடத்த சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கையை எதிர்கால குழு கூட்டத்தில் பரிசீலிப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here