follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉலகம்வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

Published on

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன் வெங்காயத்துக்கு 550 டாலர் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் வெங்காயம் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று சில நாடுகளுக்கு மட்டும் இந்தியாவிலிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு தற்போது முற்றிலும் விலக்கிக் கொண்டுள்ளது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் 27 – செப்டம்பர் 10 ஆகிய நாட்கள் தீர்மானமிக்கவை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரண்டு...

தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக...

தாய்வான் பாராளுமன்றத்தில் அடிதடி

தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின்...