follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1"ஐக்கிய மக்கள் சக்தியினை டயானா அல்ல மங்களவே பதிவு செய்தார்"

“ஐக்கிய மக்கள் சக்தியினை டயானா அல்ல மங்களவே பதிவு செய்தார்”

Published on

பிரஜை அல்லாத ஒருவர் இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன் மூலம் கட்சிப் பதிவுகள் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி டயானா கமகேவுக்கு சொந்தமானது என்று பலர் கூறுகின்றனர்.

இது தொடர்பில் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கருத்து வெளியிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி மங்கள சமரவீரவினால் பதிவு செய்யப்பட்டதாக அங்கு அவர் கூறினார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தமையால் சில தவறான வழிகாட்டுதல்கள் ஏற்பட்டுள்ளதாக எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டினார்.

பெப்ரவரி 2020 முதல், ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளராக இருந்தார்.

அதன் தலைவராக சஜித் பிரேமதாச செயல்படுகிறார்.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்ட போது ரஞ்சித் மத்தும பண்டார வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக எரான் விக்கிரமரத்ன மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகத்தின் நியமனத்தை இரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவித்து, ரஞ்சித் மத்தும பண்டாரவின் நியமனம் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

“ஈரான் ஜனாதிபதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் துயர மரணம் தொடர்பில் முன்னாள்...

இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றது. பலஸ்தீன் - "இழப்பு துயரமானது,...

இலங்கையை சேர்ந்த ISIS பயங்கரவாதிகள் 4 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...