follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுசட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்கள் தவிக்கும் நேரத்தில், இந்த நாட்டைப் பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார். தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியது.

அத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. கடந்த இரண்டு வருடங்களில் எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சி புத்துயிர் பெற்றுள்ளது எனவும் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு ஊழல், இலஞ்ச ஒழிப்பிற்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

நீதித்துறையை வலுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் மோசடி, ஊழல், குற்றச்செயல்களைத் தடுக்க புதிய சட்டவிதிகள் இயற்றப்படும்.” என்று தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...