சுகயீன விடுப்பு அறிக்கை மூலம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (20) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
25,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரி சிறைச்சாலை அதிகாரிகள் உரிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.