10வது உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) மாநாட்டில் உரையாற்றினார்.
அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி, உலகளாவிய வரி ஏய்ப்பு தொடர்பான சொத்துக்களின் வருடாந்த இலாபம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், காலநிலை மாற்றத்திற்கு நிதியளிப்பதற்காக அந்த இலாபத்தின் மீது 10% வரி விதிக்க இலங்கை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேசியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த 18ஆம் திகதி பாலியில் உள்ள Gust Nura Rai சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
10வது உலக நீர் உச்சிமாநாட்டின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உக்ரேனில் ஏற்படும் மரணங்கள் மற்றும் அழிவுகளுக்கு உலகளாவிய வடக்கு நிதியளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அழிவுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதில் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்தார். .
மாநாட்டுக்கு முன்னதாக, இதில் பங்கேற்க வந்த அனைத்து நாட்டுத் தலைவர்களும் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.