follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கிராம சேவகர்களின் பதவி உயர்வு - சம்பள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

கிராம சேவகர்களின் பதவி உயர்வு – சம்பள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

Published on

அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தற்போதுள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்து பொதுவான உடன்பாட்டை எட்டுமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

கிராம சேவகர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிராம சேவகர்களின் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதன்போது கிராம சேவகர் சேவை யாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இங்கு கிராம சேவகர்களின் பதவி உயர்வு தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதால் அவற்றைத் தீர்க்கும் வகையில் குறித்த சேவைக்கான சட்டமூலம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென கிராம சேவகர்களின் சம்மேளனம் வலியுறுத்தியது.

இதன்படி, அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சேவை சட்டமூலத்தில் சாதகமான முன்மொழிவுகள் உள்வாங்குமாறு சாகல ரத்நாயக்க அறிவுறுத்தினார்.

அறுபத்தொரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பழமையான கிராம சேவை என்ற வகையில், அதற்குரிய சேவை சட்டமூலத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...