follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP2ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு

Published on

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை எனவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக தம்மைப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக முன்னிறுத்துவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நேரத்தில் இது சிறந்த வழி என்று அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம் காரணமாக இது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இதற்கு நேர்மாறான கருத்தைக் கொண்ட ரவி கருணாநாயக்க, நகைச்சுவைகளை வழங்காமல் ஜனநாயக ரீதியில் மக்களின் நம்பிக்கையைப் பேணுவதே முக்கியமானது என்கிறார்.

“எங்கள் ஜனாதிபதி மிகவும் ஜனநாயக நபர். பலர் பலவிதமான கதைகளைச் சொன்னாலும், அவரது அரசியல் பயணம் நிச்சயமாக மக்களின் கருத்துக்களுக்குள் பயணிக்கும் ஜனநாயக வழி, வீண் பரசூட் அல்ல. இங்கு நகைச்சுவைகள் தேவையில்லை என்று நினைக்கிறேன். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஜனநாயக ரீதியாக ஏதாவது செய்தல். கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைப்பார். அதன் ஊடாக வெற்றி பெற்று நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வது அவசியமாகும்..” என நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில்...

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்குக்...

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...