follow the truth

follow the truth

September, 13, 2024
HomeTOP1நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள்

Published on

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியிடப்பட்ட நிலையில், பெறுபேறுகளுக்கு அமைய ஒவ்வொரு பாடப் பிரிவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அறிவியல் பிரிவில் (Science) அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை காலி சங்கமித்த மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த பஹன்மா உபனி லெனோரா பெற்றுள்ளார்.

அதேபோல், கணிதப் பிரிவில் (physical Science) கொழும்பு ஆனந்த கல்லூரியை சேர்ந்த W.A சிராத் நிரோத முதலிடத்தை பெற்றுள்ளார்.

கலைப் பிரிவில் காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தை சேர்ந்த தசுன் ரித்மிக விதானகே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 269,613 பரீட்சாத்திகளில் 173,444 பேர் (64.33%) பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடையவர்கள் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்ற உத்தரவு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம்...

நீண்ட வார விடுமுறைக்காக இன்று விசேட போக்குவரத்து சேவைகள்

நீண்ட வார விடுமுறைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (13) முதல் விசேட போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ள போக்குவரத்து...