follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2நளினின் கார் மோதிய இளைஞன் ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சையில்

நளினின் கார் மோதிய இளைஞன் ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சையில்

Published on

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு கார் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தினை எதிர்கொண்டதாகவும், அப்போது பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வட்டுப்பிட்டிவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், சுயநினைவின்றி இருக்கும் இளைஞனின் உயிர் இயந்திரங்களினால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

திஹாரிய, கல்கெடிஹேனே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்ற இளைஞனே இவ்விபத்தில் சிக்கியுள்ளதுடன், அவர் மோட்டார் சைக்கிள் விற்பனையை வழமையாக செய்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த இளைஞன் தாயாரை இழந்துள்ள நிலையில் அவரது தந்தை தற்போது மன குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...