follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2பொஹட்டுவ வேட்பாளரும் பொது வேட்பாளரும் ரணில்?

பொஹட்டுவ வேட்பாளரும் பொது வேட்பாளரும் ரணில்?

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அடுத்த மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ஹொரண பிரதேசத்தில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக சஞ்சீவ எதிரிமான்ன இங்கு தெரிவித்தார்.

இதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கு மிகவும் பொருத்தமானவர் நியமிக்கப்படுவார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிற்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளதாக வாரப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 6ஆம் திகதி பிற்பகல் அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற விருந்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்காக இந்த விருந்து நடத்தப்பட்டதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிச்சயமாக போட்டியிடுவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு அமைப்புகளும் சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தலுக்கு ஒன்றிணைய வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் கட்சி அலுவலகத்தை கடந்த 6ஆம் திகதி திறந்து வைத்தார்.

ஜூலை மாதம் தேர்தல் பிரசாரம் தொடங்க திட்டமிடப்பட்டு 40 நாட்களில் ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும்.

செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரையான காலப்பகுதியில் தேர்தல் நடைபெற வேண்டும்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி அல்லது 12ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...