follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுமேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

Published on

T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இப்போட்டி, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட அமெரிக்க அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதன்படி, 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் சாய் ஹோம் அதிகபட்சமாக 81 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று கொண்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...