follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2நிலத்தை நம்பியுள்ள கிழக்கு மக்கள் சொந்தக் காலில் நிற்கவே ரணிலுக்கு ஆதரவாம்

நிலத்தை நம்பியுள்ள கிழக்கு மக்கள் சொந்தக் காலில் நிற்கவே ரணிலுக்கு ஆதரவாம்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (22) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்களை அவர்களின் தலைமையகத்தில் சந்தித்தார்.

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கினால் நிலத்தை நம்பியுள்ள கிழக்கு மக்கள் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பு ஏற்படும் என சந்திரகாந்தன் இங்கு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்கதொரு நாளாகும். கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் தலைவிதியிலும் எதிர்கால அபிவிருத்தியிலும் ஒரு புள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை. எமது மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணம் விவசாயம் மற்றும் மீன்படித் துறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தில் இருக்கின்ற பொருளாதார வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைய வேண்டும். ஏனென்றால் இங்கு உள்ள வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு அவர் இருக்கின்றார். அதனால்தான் நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மாகாண சபை மூலம் இயன்றளவு வழங்குவதுடன் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகின்றார். எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் இந்த தீர்வுகளைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே அதற்கு அவசியமான சூழலையும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது. தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு அவசியமான நிதிகளை ஒதுக்கித் தந்துள்ளார். நாம் அவற்றுக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

நாட்டின் நிர்மாணத்துறை, உற்பத்தித் துறை, விவசாய நவீனமயமாக்கல், மீன்படித்துறை, தொழில்நுட்பத் துறை மற்றும் AI தொழிநுட்பம் போன்றவற்றை உயர் மட்டத்திற்கு கொண்டு வரக்கூடிய ஆற்றல், அறிவு மற்றும் திட்டமிட்ட அடிப்படையில் பணியாற்றக்கூடிய தலைவராக ஜனாதிபதி இருக்கின்றார். இவற்றை முன்னேற்றும் வேலைத்திட்டங்களை அமுலாக்கக் கூடிய நிர்வாக வாய்ப்பை பெற்றுக்கொடுத்தால் மண்ணை நம்பி வாழும் கிழக்கு மாகாண மக்கள் நிச்சயமாக சொந்தக் காலில் நிற்பார்கள். எமது அழைப்பையேற்று எமது அலுவலகத்திற்கு வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்…” என்று தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...