follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகாணி உறுதியைப் பெறும் மக்களின் உரிமையைப் பறிக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை

காணி உறுதியைப் பெறும் மக்களின் உரிமையைப் பறிக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை

Published on

உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். அந்தத் தகவல்களை தனக்குப் பெற்றுத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரினார்.

தமக்குரிய காணி உறுதியைப் பெற்றுக்கொள்ளும் உரிமையைப் பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

20 இலட்சம் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 20,000 பேரில் 1768 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (25) அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த காணி உரிமைகளை வழங்குவது மட்டும் போதுமானதல்ல. காணி உரிமைகளைப் பெறும் விவசாயிகளின் வருமான வழிகளும் அதிகரிக்கப்பட வேண்டும். அதன் ஊடாக நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளோம். அந்த திட்டத்தின் மூலம் அனைத்து பயிர்களுக்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருகிறன. அதன் மூலம் அடுத்த 05 ஆண்டுகளில் விவசாயிகள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான ஆதரவைப் பெறுவார்கள்.

எனவே கட்சி பேதமின்றி எதிர்வரும் 02 மாதங்களில் இந்த காணி உறுதிப்பத்திரங்கள் அனைத்தையும் மக்களுக்கான வழங்க இங்குள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னின்று செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...