follow the truth

follow the truth

May, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும்.

வங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும்.

Published on

நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக நாட்டினை ஆள்பவர் தவறான கற்பிதங்களை தெரிவித்து வருகின்றார். நாட்டை ஆள்பவருக்குக் கூட இது குறித்த சரியான புரிதலும், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் தெரியாது. நாட்டை ஆள்பவர்களால் அல்லது மக்களால் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என தீர்மானித்து அறிவிப்புக்களை விடுக்க முடியாது.

சர்வதேச நிதி மதிப்பீட்டகங்கள், அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன நிறுவனங்களே உரிய மதிப்பீடுகளின் பிரகாரம் அறிவிப்பை விடுக்கும். இந்நிறுவனங்கள் அறிவியல், இலக்க மற்றும் தரவுகளை மையமாக வைத்து, நிதித்துறையின் பொருளாதார பின்னணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை ஒப்பிட்டாய்ந்து, வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவந்து விட்டதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும்.

உண்மையான தரவுகளை நாட்டுக்கு வழங்க முடியாத ஒரு தலைமைத்துவம் இருக்கும் போது, ​​நாட்டுக்கு பொய் சொல்லி, நாட்டை ஆள்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை குடிமக்களே தீர்மானிக்க வேண்டும். வங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும். உண்மை நிலை தெரிய வேண்டும். தந்திரமான அரசியல் முடிச்சுக்களைக் கையாண்டு தமது இருக்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணப்பாட்டில் இருக்காது, இந்தப் பயணத்தின் ஒரே நோக்கம் 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதாக இருக்க வேண்டும்.

இந்த தூய நோக்கத்துடன் தேசிய நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...