follow the truth

follow the truth

July, 15, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஅடக்குமுறையை ஆயுதமாக பயன்படுத்துவதை நாம் வண்மையாக கண்டிக்கிறோம்

அடக்குமுறையை ஆயுதமாக பயன்படுத்துவதை நாம் வண்மையாக கண்டிக்கிறோம்

Published on

நாட்டின் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்சார் பிரச்சினைகளால் நாட்டின் எதிர்காலம் பாரிய நெருக்கடியில் சிக்கியுள்ளமை இன்று இரகசியமானதொரு விடயமல்ல என மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடக அறிக்கை ஒன்றை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் நிலவிவரும் தொழில் வல்லுநர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அரசின் முழுப் பொறுப்பாகும். இது தொடர்பாக அரசாங்கத்தின் சாதகமான தலையீடு இல்லாத நிலையில் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக ஆசிரியர்கள், அதிபர்கள், பல்கலைக்கழக கல்வித்துறை ஊழியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது உண்மையான துயரமென்றே கூற வேண்டும்.

ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காததற்கு மத்தியில் அவர்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதையும் நாம் அனுமதிக்கக் கூடாது. பிள்ளைகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் நாட்டின் எதிர்காலம் முகம்கொடுக்கும் சவால்களையும், அரசியல் கட்சிகளின் ஊடாக இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், தங்கள் பிள்ளைகளை சர்வதேசப் பாடசாலைகளுக்கும், வெளிநாடுகளில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் நாமாகவே வழிவகுக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்வது இங்கு அவசியமாகும்.

பாடசாலை கல்வித் துறையில் நிலவும் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க நியமிக்கப்பட்ட சுபோதானி குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். மற்றப்படி அடக்குமுறையை ஆயுதமாக பயன்படுத்துவதை நாம் வண்மையாக கண்டிக்கிறோம். பிரச்சினைகளுக்கான பதிலை வழங்குவதற்கு பதிலாக, பொலிஸ் தாக்குதல்கள் போல அடக்குமுறையை ஆயுதமாக பயன்படுத்துவதை கண்டிக்கிறோம். பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு பதிலாக, பொலிஸ் தாக்குதல்கள் மற்றும் ஆசிரியர் – அதிபர் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவது போன்ற அச்சுறுத்தல்களை விடுப்பது இந்த பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக கூறி பில்லியன் கணக்கான பணத்தை செலவு செய்து பிரசாரத் திட்டங்களுக்குச் செலவிடும் அரசு, வீண் செலவுகளை நிறுத்துவதற்கு இது எந்த பிரச்சினையுமாக கருதாது, நாட்டின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்காமையே இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை என்பதற்கு சிறந்த சான்றாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில் கல்விச் சேவையின், ஒவ்வொரு துறையிலும் உள்ள தரப்பினர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து, பாராமன்றத்தில் கேள்விகளை எழுப்பி தீர்வு காண அக்கறையுடன் செயற்பட்டார்.

கல்விப் பிரச்சினைகளை அரசியலுக்கு கொண்டு வந்து நாட்டின் எதிர்காலத்தை சீரழிப்பது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல. ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையையும் செயல் ஒழுங்கையும் கொண்டுள்ளது. எனவே, நாட்டின் எதிர்கால சந்ததியினர் குறித்து சிந்தித்து, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களில் சிக்கிக் கொள்ளாமல் செயல்படுமாறு ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறோம் என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

“மலையகத் தமிழன்” என்பது எனது அடையாளம்! “நான் ஒரு இலங்கையன்”.

"கெஞ்சி கேட்டால் பிச்சை துணிந்து கேட்டால் உரிமை". நாம் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை மட்டும் இறுதிக் கோரிக்கையாக...

“அந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தான் வேறு யாருமல்ல”

நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் வேறு யாருமல்ல மஹிந்த ராஜபக்ஷவே என சனத் நிஷாந்தவின் மனைவி...

இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று (15) நடைபெறவுள்ளதாக பரவிய செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள்...