follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2ஹிருணிகாவை தொடர்ந்து டயானா?

ஹிருணிகாவை தொடர்ந்து டயானா?

Published on

இலங்கையின் பிரஜை இல்லை என அறிந்து சுமார் 04 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராகவும், இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பொதுப் பணம் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராகவும், இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றிய போது, ​​பொதுப் பணம் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் பிரஜை அல்ல என்பதை அறிந்து பாராளுமன்ற உறுப்பினராகவும், இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டு பொதுப் பணம் மற்றும் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தி பணத்தை மீளப் பெற்றுத்தருமாறு ‘ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடியுரிமை’ அமைப்பின் தலைவர் கமந்த துஷார கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு அதிகாரத்தில் இருக்கும்போதுப் அதிகார துஷ்பிரயோகத்தின் கீழேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு அண்மையில் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...