ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானி சாகல ரத்னாயக்கவின் வாகன பேரணியை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த 21 வயது இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொத்துவில் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்து அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் பொறுப்பேற்றுள்ளனர்.
பொத்துவிலிலிருந்து கொழும்பு வந்த குறித்த இளைஞன் ஐக்கிய அரசு இராச்சியத்தின் தூதரக அலுவலகத்திற்குசெல்வதற்காக கொள்ளுப்பிட்டிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தான் இதற்கு முன்னர் விசேட முக்கிய பிரதிநிதிகள் பயணிக்கும் வாகன பேரணியை கண்டிராத காரணத்தினால் தனது கையடக்க தொலைபேசியில் அதனை ஒளிப்பதிவு செய்ததாக மாணவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.