follow the truth

follow the truth

July, 23, 2024
Homeஉலகம்தனது சம்பளத்தை 40% குறைத்த லைபீரிய ஜனாதிபதி

தனது சம்பளத்தை 40% குறைத்த லைபீரிய ஜனாதிபதி

Published on

லைபீரியாவின் ஜனாதிபதி ஜோசப் போகாய் (Joseph Boakai) தனது சம்பளத்தை 40 வீதத்தால் குறைப்பதாக அறிவித்துள்ளார்.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கான ஒரு முன்மாதிரியாகவும் லைபீரியர்களுடன் “ஒற்றுமையை” வெளிப்படுத்தவும் இந்த தீர்மானம் இருக்கும் என அவர் நம்புவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தமது வருடாந்த சம்பளமான 13,400 டொலர் தொகையை 40 வீதத்தால் குறைத்து 8,000 டொலராக பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பில் லைபீரிய பிரஜைகளிடையே முறைப்பாடுகள் அளித்துள்ள நிலையில், அரசாங்க தரப்பினருக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்கு சென்றுள்ளார். காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அழுத்தத்தின் கீழ், பிணைக் கைதிகளை...

கேரள மாநிலத்தில் சுகாதார அவசரநிலை

இந்திய மாநிலமான கேரளாவில் சுகாதார அவசர நிலையை அம்மாநில சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது...

பைடனை விட கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது – டிரம்ப்

நவம்பர் 5 ஆம் திகதி ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால், ஜனாதிபதி ஜோ பைடனை...