follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2கஞ்சிபானியிடம் இருந்து தப்பிக்க பாதாள உலகத்தின் உதவியை நாடும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்!

கஞ்சிபானியிடம் இருந்து தப்பிக்க பாதாள உலகத்தின் உதவியை நாடும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்!

Published on

மாகந்துரே மதூஷிடம் பணத்தை முதலீடு செய்து அவரது மரணத்தின் பின்னர் பணத்தை மறைத்த பல அரசியல்வாதிகள் மற்றும் மதூஷுடன் டீல் செய்த பலர் கஞ்சிபானி இம்ரானைத் தப்பிக்க பல்வேறு பாதாள உலக குழுக்களின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் பரவலாக பேசப்படுகின்றது.

பல கோடி ரூபாவை முதலீடு செய்த மாகந்துரே மதூஷிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில் கிளப் வசந்த அத்துருகிரியவில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக டுபாயில் இருந்து கிடைத்த தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மதூஷின் மரணத்திற்குப் பிறகு, கிளப் வசந்தவின் கொலைக்குப் பிறகு, அவரிடம் பணத்தை ஏமாற்றிய பலர் பயந்து, பல்வேறு தரப்பினர் மூலம் கஞ்சிபானியுடன் தங்கள் பரிவர்த்தனைகளைக் காப்பாற்றுமாறு இப்போது துபாயில் உள்ள பாதாள குழு பிரபலங்கள் இந்நாட்டிலுள்ள தங்கள் சகாக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

தனது வர்த்தக வலையமைப்பைக் கைப்பற்றி, மதூஷின் விசுவாசமான சகாக்களை கூட கொன்று குவித்த மாகந்துரே மதூஷின் மரணத்திற்குப் பின்னர், அத்துருகிரிய சம்பவத்தின் பின்னர் ஹரக் கட்டா கட்சியினரும் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சிபானி இம்ரானின் ஆதரவுடன் மாகந்துரேயில் மதூஷுடன் இருந்த ரொட்டும்ப அமில, லொக்கு பட்டி, பொடி பட்டி போன்ற குழுக்கள் மதூஷின் வலையமைப்பில் பணம் வசூலித்து மதூஷின் கொலைக்கு பழிவாங்க ஆரம்பித்துள்ளமையால் எதிரணியினர் அச்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...