follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP2வசந்தவை இதற்கு முன்னர் சந்தித்ததில்லை - வைத்தியசாலையில் இருந்து கே.சுஜீவா

வசந்தவை இதற்கு முன்னர் சந்தித்ததில்லை – வைத்தியசாலையில் இருந்து கே.சுஜீவா

Published on

அதுருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளான பாடகர் கே. சுஜீவா தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது காலில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது மற்றும் வைத்தியசாலை அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவரை சந்திக்க அனுமதித்தது.

சுஜீவாவின் நலன்விரும்பிகள் தெரிவித்த தகவலின்படி சுஜீவா சம்பவத்தினை பின்வருமாறு விவரித்துள்ளார்.

“துலானை எனக்கு தெரியும். அவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார், அதனை என்னால் மறுக்க முடியவில்லை. எனது இரண்டு பிள்ளைகளையும் இந்த நிகழ்வுக்கு அழைத்து வரவும் கோரினார். ஆனால் நான் அவர்களை அழைத்துச் செல்லவில்லை. அப்படி நடந்தால் அவர்களும் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். வசந்தவைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தாலும், இந்த நிகழ்வுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்ததில்லை. முதன்முறையாக அவரை சந்தித்தேன். என்னுடன் ஒரு சிறிய ஜோக் செய்தார். வீடியோக்களில் என்னைப் பார்த்துள்ளதாகவும் நேரில் பார்த்ததில்லை என்றும் கூறினார். வீடியோக்களில் என்னைப் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டதாகவும், ஆனால் என்னைப் பார்த்ததும் நான் மிகவும் சிறிய ஆளாக இருப்பதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். எதிர்பாராத நேரத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. திடீரென என் இடது காலில் துப்பாக்கி சூடு ஏற்பட்டது. காயத்துடன் தரையில் விழுந்து என் காலைப் பிடித்துக் கொண்டு கதறினேன். வசந்த தரையில் இரத்தம் வழிந்து கிடப்பதைப் பார்த்தேன். நான் சத்தம் போட்டு எங்களை வைத்தியசாலைக்கு கொண்டு போக சொன்னேன். இந்த சம்பவத்தில் நயனா இறந்தார். எனக்கு அதனை நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சி.
எனக்கு சுமார் மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தேன், இப்போது நான் ஒரு சாதாரண வார்டில் இருக்கிறேன்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல்...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...