follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு நிதி வசதி பெக்கேஜ்

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு நிதி வசதி பெக்கேஜ்

Published on

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மீள வலுவூட்டும் நோக்கில், நுண், சிறு மற்றும் நடுத்தர முயற்சிகளுக்கான முதலீடு மற்றும் செயற்பாட்டு மூலதன வசதிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நிதி வசதிப் பெக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மானிய வட்டி விகிதத்தில் அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற விசேட வங்கிகள் உட்பட 15 நிதி நிறுவனங்கள் மூலம் நெருக்கடியை எதிர்கொண்டு செயற்படும் நுண், சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் செயற்பாடற்ற கடன் பிரிவின் கீழ் இருக்கும் நுண், சிறு மற்றும் மத்திய தொழில்முற்சிகளுக்காக ஒத்துழைப்பு வழங்குதல் ஆகிய பிரதான இரு பிரிவுகளின் கீழ் இந்தக் கடன் வழங்கப்படும்.

அந்த நோக்கத்திற்காக, தொழில்துறை அமைச்சினால் நிதி உதவி தேவைப்படும் மற்றும் அவர்களின் வணிகங்களை மேலும் மேம்படுத்தும் திறன் கொண்ட தகுதியுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்படும்.

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்படுத்தும் முதலீட்டுக் கடனின் கீழ், 10 வருட காலத்திற்கு 7% சலுகை வட்டி விகிதத்திற்கு உட்பட்டு, அதிகபட்சமமாக 15 மில்லியன் ரூபாய்க்கு உட்பட்டு கடன் வழங்கப்பட இருப்பதோடு இதற்காக 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. .

செயற்படாத கடன் பிரிவின் கீழ் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு மூலதனமாக 5 வருட காலத்திற்கு உட்பட்டதாக 8 வீத கடன் வட்டியின் கீழ் 5 மில்லியன் ரூபா கடன் வழங்கப்படுவதோடு அதற்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, டி.எப்.சி.சி வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, சனச அபிவிருத்தி வங்கி லிமிடெட், யூனியன் வங்கி, பான் ஆசியா வங்கி, கார்கில்ஸ் வங்கி ஆகியவை பங்கேற்பு நிதி நிறுவனங்களாக செயற்படும்.

எந்தவொரு நாட்டையும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களைப் பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த பொருளாதார வீழ்ச்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களே என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களின் மீட்சிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அவர்களுக்குத் தேவையான மூலதனத்தை வழங்குவதற்காக தேசிய அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று பாரிய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொது மக்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தையும் விளக்கினார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட வணிகச் செயற்பாட்டு சூழலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திறனை மேம்படுத்த இந்தப் புதிய கடன் திட்டம் உதவும்.

விவசாயம், சுற்றுலா, உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் மற்றும் பெண்கள் தலைமையிலான நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (வர்த்தகம், குத்தகை மற்றும் வாடகை வணிகங்கள் தவிர்த்து) குறித்து இந்த கடன் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது மற்றும் பொருளாதாரத்தை இறக்குமதிப் பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவது ஆகிய அரசாங்கத்தின் நோக்கத்தை அடையவும் இது உதவும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ், முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களில் திருத்தம்...

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...