இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“வேரஸ் கங்கை” திட்டத்தின் போது 27.6 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.