follow the truth

follow the truth

May, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇன்னும் சில நாட்களில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டது என்ற அறிவிப்பு வரும்

இன்னும் சில நாட்களில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டது என்ற அறிவிப்பு வரும்

Published on

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி பொருளாதாரம் மற்றும் அரசாங்கம் இல்லாத நாட்டைத்தான் பொறுப்பேற்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் எப்போதும் தனக்காக அன்றி, நாட்டுக்காகவே செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.

கஷ்டமான தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டியிருந்தது. நாட்டுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் வரையில் காத்திருந்தோம். அமெரிக்காவின் சமந்தா பவரின் உதவியோடு, உலக வங்கியின் உதவியில் உரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தோம். பணம் அச்சிட வேண்டாம் என்ற நிபந்தனையை ஐ.எம்.எப் விதித்தது. வங்கிகளிடத்திலிருந்து கடன் பெறவும் வேண்டாமென அறிவுறுத்தப்பட்டது.

சில நிவாரணங்களைத் தவிர்த்து வருமானங்களைத் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவற்றை செய்திருக்காவிட்டால் நெருக்கடியில் விழுந்திருப்போம். எந்த அளவு கஷ்டங்கள் வந்தாலும் எழுந்து வர முடியும் என்று நம்பினேன். இவ்வாறு முன்னோக்கிச் சென்ற போதும் பல முறை எதிர்கட்சியின் ஒத்துழைப்பை கோரினேன்.

உலக நாடுகளும் எமக்கு உதவ முன்வர கூடாதென அறிவிப்புக்களை வெளியிட்டனர். ஆனால் எமது பயணம் தொடர்ந்தது. எமக்கு கடன் வழங்கும் நாடுகள், ஐ.எம்.எப் அமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்புக்களும் இப்போது எம்மோடு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இலங்கையை இந்த நிலையிலிருந்து மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். இன்னும் சிறிது நாட்களில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டது என்ற அறிவிப்பு வரும். அதன் பின்னர் நம் முன்பிருக்கும் பல தடைகள் நீங்கிவிடும்.

தற்போதும் சில தடைகள் நீங்கியுள்ளன. எமக்கு உதவி வழங்கிய தரப்புக்கள் சில வேலைத்திட்டங்களுக்காக மீண்டும் நிதி வழங்குகின்றன. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளும் ஆரம்பிக்கப்படும். அவ்வாறான நிலையை தற்போது அடைந்திருக்கிறோம்.

பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இன்னும் பல வருடங்கள் தொழில் இருக்காவிட்டால் மற்றுமொரு மக்கள் போரட்டம் வெடிக்கும். இன்று அவ்வாறன பிரச்சினைகளுக்கே முகம் கொடுக்கிறோம்.

நாட்டு மக்களின் வருமானத்தை மேம்படுத்த வேண்டும். முன்னேறிச் செல்ல வேண்டும். வளர்ச்சி கண்ட உலகத்துடன் இணைந்து பயனிக்க வேண்டும். இந்த அரசாங்கம் ஒருபோதும் வறிய மக்களை மறந்துவிடவில்லை. நாட்டின் வறுமை 25 சதவீதமாக காணப்படுகிறது. அதனைக் குறைப்பதற்கான முதல் முயற்சியாக சமூர்த்திக்கு மாறாக ‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் 3 மடங்கு அதிக கொடுப்பனவை வழங்கினோம்.

இந்நாட்டின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக கட்டமைக்க இடமளியேன். நாட்டின் தேவைக்கேற்ப அரசியல்வாதிகள் இசைந்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
சிங்களவர்கள் என்று கூறிக்கொண்டு யாசகம் செய்வதில் பயனில்லை. பெருமிதம் உள்ள மனிதர்கள் என்றால் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கான மாற்றத்தை செய்வோம்.

போலி வாக்குறுதிகளை வழங்குவதில் பயனில்லை. அதனால் சஜித், அனுரவை எம்மோடு இணைந்து முன்னோக்கிச் செல்ல வருமாறு அழைக்கிறேன்.

பாராளுமன்றத்தில் மோதினாலும் நாட்டைப் பாதுகாக்க அர்ப்பணித்திருக்கிறோம். சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்கிறோம். ஆசியாவில் எந்த நாட்டுக்கும் அந்த பெருமை இல்லை. நாம் இதே பாதையில் முன்னோக்கி செல்ல வேண்டும். மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல முடியாது. நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கிகொள்வோம். அழைப்புக்கு உரிய பதில் வழங்க வேண்டும். அதனை நேரம் வரும் போது கூறுவேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...