இராணுவம், விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து தனமல்வில ஹம்பேகமுவ பிரதேசத்தில் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஏழு கஞ்சா பண்ணைகள் சுற்றிவளைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆகும்.
சந்தேகத்தின் பேரில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.