இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாக சிந்தித்து தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை மாத்திரம் கருத்தில் கொண்டு அடுத்த 5 வருடங்களுக்கு அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவதுடன் தமது பெறுமதிமிக்க வாக்குகளைப் பயன்படுத்தினால் அது வாக்காளர்களின் தவறு என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன் காரணமாக, நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நாட்டின் நீண்டகால எதிர்காலம் குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்தி வாக்களிக்க வேண்டும் என ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.