follow the truth

follow the truth

July, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபார் உரிமம் கலாச்சாரம் நம்மிடம் இல்லை

பார் உரிமம் கலாச்சாரம் நம்மிடம் இல்லை

Published on

நாடு தற்போது இயல்பு நிலையில் இருப்பதாக ஜானாதிபதி அவர்கள் கூறினாலும், நாட்டில் உருவாகியிருப்பது புதியதொரு இயல்பு நிலையாகும். இதனால் நாட்டு மக்கள் தொழில்களை இழந்து, ஜீவனோபாயத்தினை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதன் காரணமாக மக்கள் பெரும் கவலையில் இருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மக்களின் நுகர்வு, முதலீடு, சேமிப்பு மற்றும் உற்பத்தி ஆகியவை இல்லாமால் போயுள்ள காரணத்தினால் நாட்டின் ஏற்றுமதி பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இக்காரணத்தால் நாட்டின் புதியதொரு இயல்புநிலை உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்து, பணத்தினை சட்டைப் பைகளில் அடைத்து, செலவழிக்க முடியாதொரு நிலை உருவாகியுள்ளது. நாட்டை நாசமாக்கி, அதளபாதாளத்திற்கு கொண்டுசென்றுள்ள ஒரு சாதாரண நிலையே நாட்டில் நிலவி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டு மக்களின் தோள்களில் சுமக்க முடியாத அளவிற்கு சுமை ஏற்றப்பட்டு, இயல்புநிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பல்வேறுபட்ட முட்டாள்தனமான, நாட்டு மக்களை ஏமாற்றும் கருத்துகளை முன்வைப்பவர்களுக்கு, நாம் பதிலளிக்க மாட்டோம் என்றும் இதன்போது எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பார் உரிமம் வழங்குதல், ஏலம் மற்றும் மானியம் வழங்குதல் போன்ற கலாச்சாரங்கள் எம்மிடம் இல்லை. வாரிசு முறையில் அன்றி , 220 இலட்சம் மக்களின் வாக்குகளால் தான் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மதுபானம் இல்லாத யுகமொன்றை உருவாக்க முயற்சிப்போம். அரசியல் சூதாட்ட முற்றாக நிறுத்தப்படும் என்றும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மறுசீரமைப்பு என்று மக்கள் மீது எல்லையற்ற சுமைகளை சுமத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

துன்பப்படும் நாட்டு மக்களை, துன்பங்களில் இருந்து விடுவித்து, நாட்டை அபிவிருத்தி செய்யும் அனைவருக்கும் சுபிட்சம் தரும் உயர்ந்த கலாச்சாரமும், நாகரீகமான சட்ட ஒழுங்கும் கொண்ட ஒரு நாடு உருவாக்குவோம் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வ மதத் தலைவர்களும் கூறும் சிறந்த அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு, நாகரீகமான நாட்டைக் கட்டியெழுப்புவேன். பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, 220 இலட்சம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தான் வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...