follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1ஜனாதிபதி தேர்தல் பிரசார செலவுகளில் வரம்பு மீறினால் பதவி இரத்து

ஜனாதிபதி தேர்தல் பிரசார செலவுகளில் வரம்பு மீறினால் பதவி இரத்து

Published on

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய வரம்பை விட அதிகமான தொகையை வேட்பாளர் ஒருவர் செலவிட்டதாக தேர்தலின் பின்னர் தெரியவந்தால், அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் அவரின் பதவியை இரத்து செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார செலவுகள் தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தேர்தல் ஆணையாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவுகளை கண்காணிக்கும் வகையில் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வோட் மணி மீற்றர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தின் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த இணையத்தளம் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாஃப்ரல் அமைப்பு உட்பட ஆறு முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்: புதிய விலை விவரம் வெளியீடு

நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளைய தினம் முதல்...

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...