follow the truth

follow the truth

May, 14, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇலங்கையில் பல சூப்பர் மேன்கள் உள்ளனர் - ஆனால் “வன் மேன்” ரணில் மட்டுமே

இலங்கையில் பல சூப்பர் மேன்கள் உள்ளனர் – ஆனால் “வன் மேன்” ரணில் மட்டுமே

Published on

“இந்த நாட்டை கட்டியெழுப்புவது பெரிய காரியம் அல்லவென சிலர் கூறுகிறார்கள். ஐந்து வருடத்தில் இந்தியாவை மிஞ்சிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகக் கூறும் தலைவர்கள் நாட்டில் நெருக்கடி வந்த காலத்தில் எங்கிருந்தனர்? என முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று(17) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீ லங்கா’ பொதுக்கூட்டத்திலேயே அமைச்சர் ஹரின் பெனாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

இப்போது இலங்கையில் பல சூப்பர் மேன்கள் உள்ளனர். ஆனால் இலங்கையின் “வன் மேன்” என்று ரணில் விக்ரமசிங்கவை மட்டுமே சொல்ல முடியும். அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்திய தலைவராகவும் அவரே உள்ளார். நாடும் நாட்டு மக்களின் பிள்ளைகளும் முன்னேறும் அதேநேரம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் அவசியமானது.

சிலிண்டர் பற்றி பலரும் பல விடயங்களைக் கூறுகிறார்கள். ஆனால் அதனை மிஞ்சிய சின்னம் கிடைக்காது. அதனைக் கண்டவுடன் கடந்த இரு வருடங்களில் பட்ட கஷ்டங்கள் நினைவில் வர வேண்டும். பசியில் வாடிய மக்களுக்கு உணவு கிடைக்க வழி செய்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் மறக்கக் கூடாது எனவும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

சஜித் பிரமேதாசவின் சின்னம் பழைய தொலைபேசி. இலங்கைக்கு புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இன்று திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவோர் திசைகாட்டியை இயக்கவும் ரணில் விக்ரமசிங்க இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய இணைய வசதி தேவை என்பதை மறந்துவிடக்கூடாது” என்று அவர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...