follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்டிரம்ப் ஜனாதிபதியானால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி?

டிரம்ப் ஜனாதிபதியானால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி?

Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது அமைச்சரவையில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

எலான் மஸ்க்கின் ஆட்டோமொபைல்களை வெகுவாக பாராட்டிய டிரம்ப், நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், எலான் மஸ்க்கிற்கு தனது அரசின் கீழ் அமைச்சர் துறையை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், எலான் மஸ்குக்கு ஆலோசனைப் பாத்திரத்திற்காக அல்லது அமைச்சரவைப் பணிக்காக தேர்தெடுக்கப்படுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிரம்ப், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க் மந்திரிசபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...