follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2துமிந்த சில்வாவை விடுவிக்கவே சஜித்திற்கு 'ஹிரு' ஆதரவு அளிக்கிறது

துமிந்த சில்வாவை விடுவிக்கவே சஜித்திற்கு ‘ஹிரு’ ஆதரவு அளிக்கிறது

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தால் இன்று சஜித் பிரேமதாசவிற்கு ஹிரு சேனல் ஆதரவு வழங்கியிருக்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு ஹிரு சேனல் முக்கிய காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ஹிரு அலைவரிசை அலைவரிசை நூற்றி எண்பது டிகிரியை புரட்டிப் போட்டு சஜித் பிரேமதாசவுக்காகச் செயற்படுவதைப் பார்க்கும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கூட வியந்து போயுள்ளனர்.

இது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் ஆசையல்ல, அண்ணனின் வேலையைச் செய்ய வேண்டும் என்பது மூளை உள்ள எவருக்கும் புரியும் என்றும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...