follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை - அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை – அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி

Published on

பால்நிலை சமத்துவ அடையாளங்கள் மற்றும் பாலியல் நோக்குநிலைகள் என்பது பல்வேறு உயிரியல் மற்றும் சமூகவியல் காரணங்களால் ஏற்படும் வேறுபாடுகள் ஆகும். எனினும் இலங்கையில்அக்குழுக்கள்சமூகத்தின் பல இடங்களில் வன்முறை, பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலுக்கு உள்ளாகின்றன. அத்துடன் சில காலனித்துவ சட்டங்கள், சில நிறுவன கட்டமைப்புகள், சில சமூக நிறுவனங்களின் பிற்போக்குவாத சிந்தனைகள் மற்றும் பிற்போக்கு கலாச்சார கருத்துக்கள் காரணமாக, ஓரின பால் ஈர்ப்பு மற்றும் பால்நிலை மாற்றம் கொண்ட சமூகக்குழுக்களின் நீதிக்கான அணுகல் மறுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே சமமாக நடாத்தப்படும் ஒரு நீதியான சமூகத்தில், எந்த ஒரு குழுவும் அவர்களின் அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை காரணமாக ஓரங்கட்டப்படலாகாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26ம் திகதி) வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் விஞ்ஞாபன கோட்பாடுகளில் ‘பால்நிலை சமத்துவத்திற்கான பொருளாதார நீதி’ என்ற ஒ று கோட்பாடும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கோட்பாட்டின் செய்றபாடாக பால்நிலை சமத்துவத்தில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளது.

  • பால்நிலை சமத்துவ தேவைப்பாடுகளில் கவனம் செலுத்தி கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதனூடாக பெண்கள் முகம் கொடுக்கும் கஷ்டங்களை குறைத்தல்.
  • அரசியலமைப்பில் சமத்துவம் தொடர்பிலான உரிமைகளை விரிவாக்கஞ் செய்து பால்நிலை மற்றும் பாலியல் நோக்கு நிலையின் அடிப்படையில் ஓரங்கட்டப்படாதிருப்பதனை உறுதி செய்தல்.
  • ஓரின பால் ஈர்ப்பு மற்றும் பால்நிலை மாற்றம்கொண்ட சமூகக் குழுக்களுக்கான விசேடமான சுகாதார சேவைகள், சட்டச் சேவைகள், சமூக பாதுகாப்பு போன்ற அரச சேவைகளையும் நீதிக்கான அணுகலையும் அதிகரித்தல்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...