follow the truth

follow the truth

May, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவங்கரோத்திலிருந்து மீட்சி பெறுவதற்கு வறுமையை ஒழிக்க வேண்டும்

வங்கரோத்திலிருந்து மீட்சி பெறுவதற்கு வறுமையை ஒழிக்க வேண்டும்

Published on

வறுமையை ஒழிப்பதாக அரசாங்கம் கூறியபோதும் வரிய மக்கள் யார் என்பதை இனம் கண்டு கொள்ளவில்லை. வரவு செலவு குறித்து ஆராய்ந்து வறுமையை சரியாக அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை. அதனை சரியாக அறிந்து கொள்வதற்கு சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் கணிப்பீட்டு திணைக்களத்தினாலும் அதனை அறிந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. இதனை சரியாக அறிந்து கொள்ளாமல் அஸ்வெசும வேலைத்திட்டத்தை முன்னெடுத்தமையால், 8 இலட்சம் பேருக்கான நிவாரணம் இல்லாமல் போயிருக்கின்றது. இந்த வேலை திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பு அறிவியல் ரீதியாக வறுமைக்கோடு குறித்து கணக்கிடப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திடம் உறுதியான செயற்பாடுகள் இல்லை என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் பெரிய தொகையொன்று வழங்கப்பட்டு, அதனைப் பயன்படுத்தி வறுமையிலிருந்து மீண்டு வர வேண்டும். தொடர்ந்தும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாது. வங்கரோத்தடைந்த நாட்டில் வறியவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்றால் மீண்டு வர முடியாது. எனவே வறுமையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“நேசத்துக்குரிய நாடு சுபிட்சமான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி இணை அதிகாரிகளின் சங்கம் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் ‘சஜித் உடன் சமுர்த்தி சக்தி’ என்ற விசேட மாநாடொன்றை இன்று(29) ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் வறுமையை போக்கும் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு தொடர்ந்தும் மக்களை வறுமையோடு இருக்க விடாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் வறுமையை ஒழித்து மக்களை மீட்டெடுக்கும் பாரிய தேசிய அளவிலான வேலை திட்டங்களை முன்னெடுக்கும் சேர்ப்பாடாக கருதலாம்.

70, 80 ஆம் ஆண்டுகளில் வரிய மக்களுக்கு நிவாரண முத்திரைகளை வழங்கியதோடு, வறுமையில் இருந்து மீட்சி பெறுவதற்கு காணப்பட்ட ஒரே வேலைத்திட்டமும் இதுவாகும் என்றும் குறிப்பிட்டார். அதன் பின்னர் ஜனசவிய ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூர்த்தி, கெமிதிரிய, அஸ்வெசும, திவிநெகும போன்ற வறுமை ஒழிப்பு வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...