follow the truth

follow the truth

May, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது

நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது

Published on

இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது எனவும், பொய்யான வாக்குறுதிகள் ஊடாக நாடு அழிவடைவதை அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

குருநாகலில் நேற்று(30) நடைபெற்ற ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நாம் இந்த நாட்டை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். எங்களால் எப்போதும் இப்படியே இருக்க முடியாது. நாம் முன்னேற வேண்டுமானால், ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். கட்சி அரசியலை மறந்து இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக செயற்படுகிறோம் என்பதைக் கூற வேண்டும்.

80% வறுமை கிராமங்களிலேயே உள்ளது. எனவே கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். விவசாயத்தை மேம்படுத்தி கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தற்போது விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம், தேர்தலுக்கு பிறகு திட்டத்தை செயல்படுத்துவோம்.

இன்று நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாட முடியாது. நாட்டின் பொருளாதாரம் குறித்து பொய்கூறி மக்களை ஏமாற்ற முடியாது. இதை பல்வேறு கட்சிகள் செய்தன. அதனால்தான் இந்த நிலைக்கு வந்தோம். ஆதலால், யாருக்கும் விரல் நீட்டிக் கொண்டிருக்காமல், நாம் முன்னோக்கிச் செல்வோம் என்று கூற விரும்புகிறேன்.

2022 ஆம் ஆண்டை விட தற்போது பொருட்களின் விலை குறைந்துள்ளது. வரியை குறைக்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் பொருளாதாரம் வலுப்பெற்றதால் ரூபாவின் பெறுமதி உயர்ந்தது. இதனால், பொருட்களின் விலை குறைந்துள்ளது. இப்படியே தொடர வேண்டும்

மக்களிடம் பொய்கூறியது போதும். ஏமாற்றியது போதும். பொய் சொல்லி இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு கடந்த இரண்டு வருடங்களாக நாம் துன்பப்பட்டோம். எனவே, நாம் பழைய நிலைக்குத் திரும்பக் கூடாது. வலுவான பொருளாதாரத்துடன் முன்னேற அனைவரையும் அழைக்கிறேன்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...