follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP2மக்கள் அடகு வைத்துள்ள தங்கப் பொருட்களுக்கான வட்டியில் 50% கழிக்கப்படும் - ஜனக ரத்நாயக்க

மக்கள் அடகு வைத்துள்ள தங்கப் பொருட்களுக்கான வட்டியில் 50% கழிக்கப்படும் – ஜனக ரத்நாயக்க

Published on

அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களுக்கான வட்டியில் 50% குறைக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பேலியகொட பிரதேசம் மற்றும் கிரிபத்கொட நகர மக்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த ஜனக ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்

“நாங்கள் இன்று கிரிபத்கொடைக்கு எனது தேர்தல் பணிகளைச் செய்ய வந்தோம். வயல்களில் பொதுமக்கள் இல்லை என்பதைத்தான் பார்க்கிறோம். மக்கள் அடகு கடைகளில் உள்ளனர், பொருட்களை வாங்க மக்களிடம் பணம் இல்லை அவர்களின் தங்கப் பொருட்கள் நிறைய அடகுக் கடைகளில் விற்கப்படுகின்றன

இதுபோன்ற அடமானப் பொருட்களுக்கான வட்டி 50% குறைக்கப்படும் என்று எனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளேன். பொருளாதாரம் பற்றி அறிந்த புத்திசாலியை ஜனாதிபதியாக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஜனாதிபதித் தேர்தல் – வாக்களர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள்...

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...