follow the truth

follow the truth

September, 21, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஎமது வேலை திட்டங்களையே இன்று ஜனாதிபதி copy பண்ணுகின்றார்

எமது வேலை திட்டங்களையே இன்று ஜனாதிபதி copy பண்ணுகின்றார்

Published on

எமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற தனியார் துறை ஊழியர்களுக்கான பலமான வேலைத் திட்டங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார விருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தொழில் வழங்குனர்களின் முதலீட்டைப் போலவே ஊழியர்களும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பாரிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவர்கள் பணியிடத்தில் செய்கின்ற உன்னதமான பணிக்காக விஷேட திட்டங்கள் உண்டு. இதன் ஊடாக தனியார் துறையினரின் குறைந்தபட்ச சம்பளத்தை 25000 ரூபா வரை கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். அத்தோடு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையிலான சேவை கொள்கையும் தயாரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு ஏற்பாடு செய்கின்ற மக்கள் வெற்றிப் பேரணி கூட்டத்துடரின் 39 ஆவது பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் காலியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு தெளிவான கொள்கையும், தூரநோக்கு பார்வையும் உண்டு. ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட பல விடயங்களை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் SMS தகவல் ஊடாக அவற்றைச் செய்வதாக சொல்லுகின்றார்கள். அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்பாதையிலே சென்று கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டில் பெரும்பான்மையானோர் ஏழைகளாக மாறி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், வறுமையை ஒழிப்பதற்காக 24 மாதங்களுக்கு தலா மாதாந்தம் 20,000 ரூபா வீதம் வழங்கி வறுமையில் இருந்து அவர்களை மீட்டெடுப்போம். ஆத்ம கௌரவத்தோடு வாழுகின்ற பரம்பரையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம்...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...