follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

Published on

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், அங்கு உழைக்கும் தகுதியுடைய இளைஞா்களின் விகிதமும் சரிந்துவருகிறது. இதன் விளைவாக, மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ‘ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கை கைவிடப்பட்டது.
இந்த நிலையில், தங்கள் நாட்டுக் குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீன அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...