எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதும் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 10 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளன.